திருச்சி, பெரம்பலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை - சாலைகளில் வெள்ளப்பெருக்‍கு - வீடுகளுக்‍குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்‍கள் பாதிப்பு

Aug 20 2019 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி, துவாக்குடி, துறையூர், ஸ்ரீரங்கம், பாலக்கரை, கண்டோன்மென்ட், சத்திரம் பேருந்துநிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததாலும், வடிகால் பகுதிகள் சீரமைக்கப்படாததாலும் சாலைகளில் மழைநீர் பெருக்‍கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், முள்ளுக்குறிச்சி, ஆர்.புதுப்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சுமார் 52 சென்டிமீட்டர் அளவுக்‍கு மழை பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான குட்டைகள், தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் பல இடங்களில் குட்டைகள், தடுப்பணைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைநீர் வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகளை சீரமைத்து, நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, அரியலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான வாரணவாசி, தாமரைக்குளம், வாலஜாநகரம், ஓட்டக்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்குமேல் நீடித்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் வீடுகளுக்‍குள் தண்ணீர் புகுந்தது. கனமழையால் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக சாலை, புதிய பேருந்து நிலையம் மற்றும் காலி வீட்டு மனைகள் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தோங்கியது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்களம், அவ்வையார் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், இருசக்‍கர வாகனங்கள் கார்கள், தள்ளுவண்டிகள், இயந்திரங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் நீரில் மூழ்கின.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00