கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியும் அராஜகம்

Aug 18 2019 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்‍கப்பட்டனர். மேலும், அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டன.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்‍கச் சென்றனர். இரவு 11 மணியளவில் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், ராட்சத மின்விளக்குகளை எரியவிட்டு மீனவர்களை அச்சுறுத்தினர். அதுமட்டுமின்றி 200-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த ஜி.பி.எஸ் கருவி, மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி படகிலிருந்து கடலில் வீசியெறிந்தனர். இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலால் படகுகள் சேதமடைந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை முடிவுக்‍கு கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணாவிட்டால், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00