உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு பாலம் அமைக்க எதிர்ப்பு : பணிகளை தற்காலிகமாக நிறுத்த சமாதான கூட்டத்தில் முடிவு

Aug 17 2019 6:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு கடலில் சாலை பாலம் அமைக்‍க கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தற்காலிகமாக பணிகளை நிறுத்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அணுமின் உலைகளை குளிர்விப்பதற்காக ஆழ்கடலில் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்படவுள்ளது. இதற்காக மோர் பண்ணை கிராமம் அருகே கடலில் சாலையும், அதனைத் தொடர்ந்து பாலமும் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு மோர்ப்பண்ணை கிராமமக்‍கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சமாதான விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள், மோர்ப்பண்ணை கிராமத்தினர், சமூக ஆர்வலர்கள் கடலில் சாலை அமைப்பதற்கும், பாலம் அமைப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து வரும் 22-ம் தேதி இதுதொடர்பாக மீண்டும் கூட்டம் நடத்துவது என்றும், அதுவரை சாலை பணிகள், பாலம் பணிகளை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00