கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை -அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு

Aug 17 2019 6:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் காவேரி ஆற்றில் இருந்து, கிளை வாய்க்கால்களுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து, திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனூர் தடுப்பணைக்கு சென்றடைந்தது. வழக்கமாக, தண்ணீர் திறந்துவிடப்பட்ட அடுத்த நாளே பாசனத்திற்காக மாயனூர் தடுப்பணையில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இதுவரை கட்டளைமேட்டு வாய்க்கால், கட்டளைமேட்டு புதிய வாய்க்கால், பிச்சமேட்டு வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், கரூர் மாவட்டத்தில் காவிரி நீரை நம்பி பரியிடப்பட்டிருந்த வாழை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள், வாடிப்போனதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தற்போது, நெல் நடவு தொடங்கவுள்ளதால், உடனடியாக கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00