மாணவர்கள் சாதிக்கயிறுகள் கட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்லும் விவகாரம் - பொறுப்பை தட்டிக் கழிக்கும் வகையில் கல்வி அமைச்சர் பேசியிருப்பதற்கு, டிடிவி தினகரன் கண்டனம்

Aug 17 2019 9:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாணவர்கள் சாதிக்கயிறுகள் கட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்லும் விவகாரத்தில், பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் கல்வி அமைச்சர் பேசியிருப்பதற்கு கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கயிறுகள் கட்டி வருவது தொடர்பான விவகாரத்தில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் கல்வி அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.

சாதிய அடையாளத்தை வெளிக்காட்டும் விதமாக மாணவர்கள் கைகளில் வண்ணப்பட்டைகளைக் கட்டிக் கொண்டு பள்ளிக்கு வருவதைத் தடுக்க வேண்டியது அவசியமானதுதான்.

அதேநேரத்தில் இறை நம்பிக்கையுடன் தொன்று தொட்டு கைகளில் கட்டப்படும் கயிறுகளுக்கும், நெற்றியில் திருநீறு, குங்குமம் உட்பட திலகங்கள் இடுவதற்கும் தடை விதிப்பது மத நம்பிக்கைகளில் தலையிடுவதாகும். எனவே, இப்பிரச்சனையில் பழனிசாமி அரசு தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00