வரும் 15-ம் தேதி அமமுக தலைமைக் கழக பேச்சாளர்களின் பயிலரங்கம் : தலைமைக்கழகம் அறிக்கை வெளியீடு

Aug 13 2019 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக் கழக பேச்சாளர்களின் பயிலரங்கம், வரும் 15-ம் தேதி, சென்னை தலைமைக்‍ கழக அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்ட தலைமைக்கழக பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.

அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக தலைமைக்‍ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மண்டல வாரியாக நடைபெற்று வரும் தலைமைக்கழக பேச்சாளர்கள் பயிலரங்கத்தின் தொடர்ச்சியாக வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை தலைமைக்‍ கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதில், வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களின் தலைமைக்கழக பேச்சாளர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களோடு இந்த மாவட்டங்களில் பேச்சாளராக விரும்பும் கழகத்தினர், பேச்சுத்திறனும் கருத்துச் செறிவும் நிறைந்த கழக உடன்பிறப்புகள், கழகத்தின் சார்பு அணிகளில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயிலரங்கில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அப்படி கலந்துகொண்டு தங்களின் பேச்சாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துபவர்கள், தலைமைக்கழக பேச்சாளர்களாக தமிழகம் முழுதும் சுற்றிவந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை-கோட்பாடுகளை மக்களிடம் முன் வைக்கும் வாய்ப்பினைப் பெறலாம் என்றும் தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00