மேட்டூர் அணைக்‍கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியது

Aug 12 2019 8:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேட்டூர் அணைக்‍கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியது.

கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பியதையடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சத்து 85 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் பெருக்‍கெடுத்து பாய்கிறது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனிடையே, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்‍கு வரும் நீரின் அளவு மேலும் உயர்ந்துள்ளது. வினாடிக்‍கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்‍கிறது. இதன்மூலம் அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியது.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் முக்கிய நிர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, மறையூர், காந்தலூர், தூவானம் போன்ற பகுதிகளில் இடைவிடாது தொடர் கனமழை பெய்து வருகிறது. அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,636 கன அடி நீர் வந்து கொண்டிருக்‍கிறது. இதனால் அமராவதி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் 76 அடியாக உள்ளது. இதேபோல், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00