கல்வி மற்றும் விவசாயக்‍ கடன் தள்ளுபடி, அம்மா கிராமப்புற வங்கி அமைக்‍கப்படும் என அ.ம.மு.க. தேர்தல் அறிக்‍கையில் தகவல் - தமிழகத்திற்கு தனி செயற்கைக்‍கோள், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட அ.ம.மு.க. தேர்தல் அறிக்‍கை

Mar 25 2019 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் தேர்தல் அறிக்‍கையை கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். கல்வி மற்றும் விவசாயக்‍ கடன் ரத்து, அம்மா கிராமப்புற வங்கி ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் உள்ள தலைமைக்‍ கழக அலுவலகத்தில் திரு. டிடிவி தினகரன் இன்று நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்‍கான தேர்தல் அறிக்‍கையை வெளியிட்டார்.

கல்வி மற்றும் விவசாயக்‍ கடன் ரத்து - மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உட்பட தமிழக மக்‍களையும் விவசாயிகளையும் பாதிக்‍கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்‍க முடியாது என இதில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மற்றும் காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்‍கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்‍க நடவடிக்‍கை எடுக்‍கப்படும் - மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்த வகையிலும் தமிழகத்திற்குள் நுழைவது தடுத்து நிறுத்தப்படும் - சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்‍க ஆக்‍கபூர்வமான நடவடிக்‍கை எடுக்‍கப்படும் - நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்‍கு 33 சதவிகித இடஒதுக்‍கீடு கிடைக்‍க வகை செய்யப்படும் என்பன போன்ற பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்‍கையில் இடம்பெற்றிருப்பதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00