கஜா புயல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளாததற்கு திருவாரூர் மக்‍கள் கடும் கண்டனம் - அமைச்சர் காமராஜை சிறைபிடித்து பொதுமக்‍கள் முற்றுகை

Dec 12 2018 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜா புயல் தாக்கி 25 நாட்கள் கடந்தநிலையிலும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதைக்‍ கண்டித்து, அமைச்சர் காமராஜை திருவாரூர் மாவட்ட மக்‍கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் தாக்கிய பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து, நிவாரண பொருட்கள் கிடைக்காமல், இன்று வரை‍ அல்லல்பட்டு வருகின்றனர்.

அரசு அதிகாரிகள் புயல் பாதித்த பல பகுதிகளில், இன்னும் சேதத்தை மதிப்பீடு செய்யாமல் புறக்கணித்துள்ள நிலையில், அமைச்சர் காமராஜ், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று பார்வையிடாமலும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யாமல், சொகுசு காரில் கோவில் விழாக்கள், மற்றும் தினசரி மாவட்ட ஆ‌ட்சியர் அலுவலகத்தில், கண்துடைப்பாக ஆய்வு கூட்டம் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் மு‌த்துப்பேட்டை ஒன்றியத்தில், கீழப்பெருமழை கிராமத்திற்கு அமைச்சர் காமராஜ் சென்ற போது, அவரை சிறைப்பிடித்த பொதுமக்கள், நிவாரணம் குறித்து அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அமைச்சர் உரிய பதிலளிக்காததால் கோபமடைந்த கிராம மக்கள், அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00