புயல் நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து மறியல் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது
Dec 6 2018 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயல் நிவாரண தொகை, இன்னமும் வழங்கப்படாமல் இருப்பதற்கு, கண்டனம் தெரிவித்து நாகை மாவட்ட திருமருகல் ஒன்றிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பாக நிவாரண தொகை அவரவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டது. ஆனால் நிவாரணத் தொகை வழங்கப்படாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த 39 கிராம பொதுமக்கள், வாஞ்சூர் ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்ட மக்கள் எந்த ஒரு அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுவரை வந்து பார்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.