மாண்புமிகு அம்மாவின் 2-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் பல்லாயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் - நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்பு

Dec 5 2018 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 2ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் இருந்து மெரினாவில் அமைந்துள்ள அம்மா நினைவிடம் நோக்‍கி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் நிறைவில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்‍கொண்டனர்.

மாண்புமிகு அம்மாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், சென்னையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கழக அவைத் தலைவர் திரு.அன்பழகன் தலைமையில், பேரறிஞர் அண்ணாசிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்‍கள் பல்லாயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்றனர்.

வாலாஜாசாலை, சேப்பாக்‍கம் கிரிக்‍கெட் அரங்கம் வழியாக சென்ற மௌன ஊர்வலம், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்தில் நிறைவுபெற்று, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலரஞ்சலி செலுத்தினார்.

கழக முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்‍களும் அம்மாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் கழகத்தையும் இரட்டை இலை சின்னத்தை மீட்பது உள்ளிட்ட லட்சிங்களை நிறைவேற்ற சூளுரைக்‍கப்பட்டது.

அம்மாவின் நினைவு தின அமைதி ஊர்வலத்திலும், அஞ்சலி நிகழ்ச்சியிலும் அவைத் தலைவர் திரு.அன்பழகன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு.தங்கதமிழ்செல்வன், பொருளாளர் திரு.ரெங்கசாமி, கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.பழனியப்பன், அமைப்புச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்‍கள் உள்ளிட்டோர் மலர் தூவி அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00