கஜா புயலால் பாதிப்பு - பல்வேறு இடங்களில் போராட்டம் : அரசு கண்டுகொள்ளாததால் மக்கள் கடும் கொந்தளிப்பு - பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தினர் நேரில் ஆறுதல்

Nov 19 2018 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார்குடி பகுதி மக்களை, அரசு கண்டுகொள்ளாததால், கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தங்கள் குறைகளை கேட்க யாரும் வராததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார்குடி நகராட்சி மற்றும் மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவாக்கோட்டை, பைங்காநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இதுநாள் வரை அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் பார்வையிட வராததால், பாதிக்கப்பட்ட மக்கள் பல்‍வேறு இடங்களிலும், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புயல் தாக்கி 4 நாட்களாகியும் இதுவரை அரசு சார்பில் எந்தவித மீட்பு நடவடிக்கைகளையும் ‍மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் மன்னார்குடி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில், கழக பொருளாளர் திரு.ரெங்கசாமி, மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.காமராஜ், நகர கழக செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட கழகநிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00