தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் : மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்

Nov 14 2018 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

தஞ்சாவூர் மாநகர கழகத்தின் சார்பில், புதுப்படிணம் ஊராட்சியில், கழக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை கழக நிர்வாகிகளை கழக பொருளாளர் திரு.எம்.ரெங்கசாமி அறிமுகப்படுத்தினார். பின்னர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் கழக வழக்கறிஞர் இணை செயலாளர் திரு.தங்கப்பன், மாவட்ட இணைச் செயலாளர் கலைவாணி, பொது குழு உறுப்பினர் இந்திரா வேலாயுதம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக பொருளாளர் திரு.எம்.ரெங்கசாமி, திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.காமராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருவாரூர், திருத்துறைபூண்டி, நன்னிலம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து திரளான கழக நிர்வாகிள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர கழக சார்பில், மாவட்ட செயலாளர் திரு.துரை மணிவேல் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00