தூத்துக்குடியில் தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் : பொதுமக்கள் அச்சம்

Nov 8 2018 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெருக்‍களில் தேங்கி நிற்கும் மழை நீரால் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தேவர் புரம் ஒன்றாவது மற்றும் இரண்டாவது தெருக்களில் கடந்த வாரம் பெய்த மழைநீர் இப்பகுதிகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. சரியான வாய்க்கால் வசதி இல்லாததால் தேங்கி உள்ள மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து சுகாதார சீர் கேட்டினையும் ஏற்படுத்தி வருகிறது.

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தின் கால்வாயினை தூர்வார பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும், முறையாக தூர்வாராததால், குளத்தின் 8 வது மதகு நேற்று முன் தினம் சில மர்ம நபர்களால் திடீரென திறக்கப்பட்டது. இந்த வெள்ளநீர் கால்வாய் வழியாக வெளியேறாமல், அருகில் உள்ள பொன்னகரம் என்ற பகுதிக்குள் புகுந்தது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இன்னும் தண்ணீரில் மிதந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு கால்வாய் முறையாக தூர்வாரப்படாததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், பல்வேறு பகுதிகளிலும் குப்பைதொட்டிகள் நிரம்பி வழிவதோடு, ஆங்காங்கே குப்பைகள் மலை போல தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் அலட்சியத்தால் காய்ச்சல் பரவும் அவலநிலை உருவாகியுள்ளது. இதே போன்று அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களிலும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00