சீர்காழியில் இரு சக்கர வாகனத்தில் முந்திச்செல்வதில் தகராறு : 4 பேர் காயம்

Nov 8 2018 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீர்காழியில் இரு சக்கர வாகனத்தில் முந்திச்செல்வதில் ஏற்பட்ட தகராறில், நான்கு பேர் காயம் அடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூவரை கைது செய்தனர்.

நாகை மாவட்டம், சீர்காழி தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்கர் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சாமிநாதன் என்பவருக்கும், நங்கநலத் தெருவை சேர்ந்த சௌந்தர்ராஜன் மகன் செந்தமிழன் என்பவருக்கும் இடையே, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஒருவரை ஒருவர் முந்திச்செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பிரச்சனை‌யை முடிவுக்கு கொண்டு வர நேற்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியதில், ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அதில் செந்தமிழ்செல்வன், ஆகாஷ், இருதயராஜ் மற்றும் பிரசாந்த் ஆகிய நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சீர்காழி போலிசார் சாமிநாதன், ஹரிஹரன், கண்ணன ஆகிய மூவரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதுவது போல் வந்ததால், இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் பாலசுந்தரம் என்பவர் மணிகண்டன் கன்னத்தில் பலமாக அறைந்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த மணிகண்டன் அவரது அண்ணன் மகேஸ்சிடம் கூறி, நண்பர்களுடன் சேர்ந்து, பாலசந்தரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாலசுந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கே.கே.சாலை அருகே மகேஷ் மற்றும் அவரது நண்பர்களை உருட்டு கட்டையால் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த மகேஷ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சசி, பாலசந்தர், சத்திஷ், தினேஸ் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00