தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஆலோசனைக் கூட்டம்

Oct 16 2018 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை கூட்டம், கடத்தூர் ஒன்றியம் தென்கரைக்கோட்டை அருகே உள்ள வடகரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கழக தலைமை நிலைய செயலாளர் திரு பி.பழனியப்பன் முன்னிலையில், மாற்றுக்‍கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்‍கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். இதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய ஆற்றவேண்டிய கழகப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்தக்‍ கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் திரு. டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சிட்லபாக்கம் மற்றும் ஜோதி நகரில் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்‍கையை மேற்கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது. காஞ்சி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. ம.கரிகாலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மேற்கு மாவட்டக்‍ கழகம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் திரு. கே.எஸ்.கே பாலமுருகன் மங்களூர், விநாயக மங்கல், எஸ்.புதூர், எஸ்.நாரையூர், சிறுபாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழகக் கொடி ஏற்றி வைத்தார். அப்போது, திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோர், கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00