மதுரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Oct 16 2018 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக்‍கோரி, பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி 42-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை அமைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பல மாதங்களாக வெளியேறி வருவதாகவும், குடிநீரில் சாக்கடை கலந்துவருவதாகவும் கூறி மதுரை சின்ன சொக்கிகுளம் சாலையில் அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். சாக்கடை தேங்கியிருப்பதால், கொசுக்‍களால் பல்வேறு தரப்பினரும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனிடையே, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கொட்டகுடி, அரசப்பன்பட்டி, பனங்காடி ஆகிய பகுதிகளுக்கும் செல்லும் பெரியார் கால்வாய் நீர் திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் பாஸ்கரனின் தூண்டுதலால் சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள விரிவாக்கப்பட்ட கால்வாய்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்லப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், மீண்டும் தங்கள் பகுதி கால்வாய்களை திறக்‍கவேண்டும் என்றும், இல்லாவிட்டால் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00