வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்‍கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை - பல்லாயிரக்‍கணக்‍கான கழக தொண்டர்கள், பொதுமக்‍கள் பங்கேற்பு

Oct 17 2018 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளையொட்டி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 219-வது நினைவுதினம் இன்று கடைபிடிக்‍கப்படுகிறது. இதனையொட்டி, மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகை தந்தார். அவருக்‍கு வழி நெடுகிலும் பல்லாயிரக்‍கணக்‍கான தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகே கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வந்தபோது, அவருக்‍கு உருமி மேளம் முழங்க, பாரம்பரியம் மிக்‍க தேவராட்டத்துடன் வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

செல்லும் வழியில் கழகக்‍ கொடியினை திரு. டிடிவி தினகரன் ஏற்றி வைத்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் வாழ்த்து முழக்‍கம் எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து, ஏராளமான இஸ்லாமிய சமூகத்தினர் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை வாழ்த்தி வரவேற்றனர்.

தொண்டர்களின் உற்சாக வரவேற்பினை ஏற்றுக்‍கொண்ட கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00