துரோகிகளின் பிடியில் உள்ள கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் மீட்டெடுக்‍கும் - கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதி

Oct 16 2018 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

துரோகத்தின் பிடியில் உள்ள கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக்‍ கழகத்தையும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் மீட்டெடுக்‍கும் என்று கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‍ கழகம் 1972 அக்‍டோபர் 17 அன்று சுயநல சித்தாந்தத்தை எதிர்த்து சீறி சிலிர்த்தெழுந்த இயக்‍கம் - பகுத்தறிவு பேராசான் தந்தை பெரியாரின் பாசறையில் தோன்றிய அண்ணாவின் கொள்கை காக்‍க புரட்சித் தலைவரின் ஆற்றல்மிக்‍க தலைமையில் அவதரித்த மக்‍கள் இயக்‍கம், அடுத்தடுத்த வெற்றிகளை படிக்‍கட்டுகளாய் அமைத்தபோதிலும், அ.இ.அ.தி.மு.க. ஒருநாள் நாடாளும் என்று, அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க. ஏற்றுக்‍கொள்ளவே இல்லை என சுட்டிக்‍காட்டியுள்ளார்.

புரட்சித் தலைவரின் மறைவுக்‍குப் பின்னால், அ.தி.மு.க.வும் மறைந்துபோகும் என்று ஆரூடம் கணித்தவர்களை திகைப்பில் ஆழ்த்தும் வகையில், இயக்‍கத்தை ஒன்றாக்‍கி, இழந்த சின்னத்தை மீட்டு, இழந்த புரட்சித் தலைவரின் ஆட்சியையும் மீண்டும் நிலைநாட்டியவர் நம் இதயமெல்லாம் நிறைந்துள்ள மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா - அந்த நேரத்தில், அரசியல் போர்க்‍களமாக மாறிய தருணத்தில், புரட்சித் தலைவி அம்மாவின் புரட்சிகரமான அரசியல் பிரவேசத்தில் அரணாகத் திகழ்ந்தவர் நம் தியாகத் தலைவி சின்னம்மா - இதனை யாரும் மறக்‍கவும் முடியாது, மறுக்‍கவும் முடியாது என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு போராளியாக தன் வாழ்க்‍கையை அமைத்த அம்மாவின் வழியில் கழகத்தையும், இரட்டை இலைச் சின்னத்தையும், தலைமைக்‍ கழகத்தையும், கொடியவர்களின் பிடியிலிருந்து சட்டப்பூர்வமாக மீட்போம் - அந்த நல்ல நாள் வெகுதொலைவில் இல்லை - நாம் ஒவ்வொருவரும் கழகம் மீட்கும் ஜனநாயகப் போராளிகளாக களத்தில் நின்றிடுவோம் - துரோகத்தை வீழ்த்தி வென்றிடுவோம் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00