கீழடி அகழ்வாய்வில் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட 7000 பொருட்கள் கிடைத்துள்ளன- சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் - 5 வது கட்ட ஆகழ்வாய்வுக்கு அனுமதி
Oct 11 2018 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கீழடி அகழ்வாய்வின் போது ஏராளமான தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்பொழுது 4வது கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழ்வாய்வின் போது ஏராளமான தங்க ஆபரணங்கள், விலங்குகளின் எலும்புகள், பானை ஓடுகள் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களை ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியா ஆய்வு மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மேலும் கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.