குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு சம்மன்

Oct 11 2018 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த மாதம் 5ஆம் தேதி சோதனை நடந்தது.

பிறகு, குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் உள்ளிட்டோர் 5 பேரை சிபிஐ கைது செய்தது.

இவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவலை வரும் 17ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராக விழுப்புரம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்கா முறைகேடு நடைபெற்ற காலத்தில் எஸ்.பி ஜெயக்குமார் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக சென்னையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00