தனியார் நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்‍கு நிலக்‍கரி கொள்முதல் செய்வதாக வெளிவந்த செய்தியின் உண்மைத்தன்மையை தமிழக அரசு உடனடியாக விளக்‍கவேண்டும் - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Oct 11 2018 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்ட விதிகளை தளர்த்தி தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்‍கு நிலக்‍கரி கொள்முதல் செய்வதாக வெளிவந்த செய்தியின் உண்மைத் தன்மையை தமிழக அரசு உடனடியாக விளக்‍கவேண்டுமென கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழ்நாடு மின் பகிர்மானக்‍ கழகம் டெண்டர் இல்லாமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்‍கரி வாங்க உத்தரவு போட்டிருப்பதாகவும், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளிடமிருந்து இந்த கொள்முதல் செய்யப்படுவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டிருப்பதை சுட்டிக்‍காட்டியுள்ளார்.

இந்த கொள்முதலுக்‍காக Tamilnadu Transparency in Tender Act 1998 என்ற சட்டத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி, இச்சட்டத்திற்கு தற்காலிக விலக்‍கு அளிக்‍கப்பட்டிருப்பதாகவும், நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்பகிர்மானக்‍ கழகம் ஒரு டன் நிலக்‍கரியை கோல் இந்தியா என்ற அரசு நிறுவனத்திடமிருந்து 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவதாகவும், ஆனால், அதே அளவுள்ள நிலக்‍கரியை தற்பாது அதானி குழுமம், ஸ்ரீ ராய்ல சீமா, யாசின் இம்பெக்‍ஸ் ஆகிய நிறுவனங்களிலிருந்து கூடுதல் விலைக்‍கு வாங்குவதாகவும் இந்தச் செய்தி தெரிவிப்பதாக திரு. டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதியே தமிழகத்தின் நிலக்‍கரி கையிருப்பு வெறும் 2 நாட்களுக்‍கு மட்டுமே போதுமானதாக உள்ளதென தெரிவித்த அமைச்சர் தங்கமணி, பின்னர் மத்திய அரசிடம் நிலக்‍கரி உடனடியாக தேவைப்படுவதாக கூறியதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முரண்பட்ட நடவடிக்‍கையில் இந்த அரசு ஈடுபட்டு வருவதோடு, ஊழல் செய்வதற்காகவே இவ்வாறு சட்டவிலக்‍கு தந்து கொள்முதல் தொடங்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை தொடருமானால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதோடு, அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி சந்தேகக் கேள்வி எழும் - இந்தச் செய்தி உண்மையாக இருக்‍கும் பட்சத்தில், அதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துக்‍கொள்வதோடு, இது பற்றிய விளக்‍கத்தை அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என வலியுறுத்துவதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00