அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் : தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்- பொதுமக்கள் பங்கேற்பு

Sep 24 2018 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்‍களும் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கத்தில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில், ஏழை, எளிய 500 பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ.ஏழுமலை, எல்லாபுரம் ஒன்றிய கழக செயலாளர் திரு. எஸ்.குணவரதன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், கே.வி.ஆர்.நகர் பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தின்போது, தே.மு.தி.க, தி.மு.க. கட்சிகளை 50-க்கும் மேற்பட்டவர்கள் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். இந்தப் பொதுக்‍கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் சி.சிவசாமி, மகளிர் அணி துணை செயலாளர் திருமதி அ.விசாலாட்சி, கழக அமைப்பு செயலாளர் கே.ஜி.சண்முகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00