திண்டுக்கல் மாவட்டத்தில் ஆளுங்கட்சியினரின் பொதுக்கூட்டத்தில் கேலி கூத்து : கலந்து கொள்பவர்களுக்கு பணப்பட்டுவாடா - டாஸ்மாக் கடைகளில் குவிந்த தொண்டர்கள்

Sep 24 2018 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியின் 3 அமைச்சர்கள் கலந்துகொள்ளும் பொதுக்‍கூட்டத்திற்கு ஆட்கள் வராததால், அதில் கலந்து கொள்பவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்‍களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். திடலில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் லட்சக்கணக்கான கழக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். சட்டப் போராட்டம் நடத்தி நீதிமன்றம் மூலம் முறையாக அனுமதிபெற்று வெற்றிகரமாக ஒரு மாநாடுபோல் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு போட்டியாக அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் போட்டி கூட்டம் நடத்த திட்டமிட்டனர். சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர், பொதுக்கூட்டத்தை கடந்த வாரம் அதே இடத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால், திட்டமிட்டபடி எடப்பாடி அணியினரால் சென்றவாரம் பொதுக்‍கூட்டம் நடத்த முடியவில்லை.

இந்நிலையில், இன்றுமாலை அதே இடத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், P. தங்கமணி, S.P. வேலுமணி ஆகியோர் பங்கேற்க பொதுக்‍கூட்டம் நடைபெறும் என நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. எனினும் இக்‍கூட்டத்திற்கு யாரும் வராததால், வாகனங்களில் சிலரை இக்‍கூட்டத்திற்கு அழைத்து வந்த கேலிக்கூத்து நடைபெற்றது. அவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களின் ஒருபகுதியினருக்கு மூலச்சத்திரம் அருகே பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.

மேலும் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பலர் மதுக்கடைகளுக்குள் புகுந்து உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00