விநாயகர் சிலைகள் கரைப்பு - போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் : அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றம்

Sep 14 2018 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்‍கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளில் சிறிய அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்‍கள் வழிபாடு நடத்தினர். விநாயகர் சிலைகளுடன் குடும்பம், குடும்பமாக காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளுக்‍கு வந்த பொதுமக்‍கள், அங்கு பூஜைகள் செய்து கடலில் கரைத்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்‍கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பகுதியில் வைக்‍கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நகரின் முக்‍கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கொக்‍கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் கரைக்‍கப்பட்டது.

நாகை மாவட்டம் கோடியக்கரையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்‍கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் கலந்துகொண்டு இசைக்கு ஏற்ப நடனமாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்‍கப்பட்டு பக்‍தர்கள் வழிபாடு நடத்தினர். பெரியகுளத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து முக்‍கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று வராக நதியில் கரைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், நூற்றுக்‍கணக்‍கான விநாயகர் சிலைகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன், பதற்றமான பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பெருமாள்கோயில் தெரு, ராஜவீதி, மசூதி தெரு பகுதிகள் வழியாகச் சென்றபோது காவல்துறையினர் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அனுமதியின்றி வைக்‍கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். காவல்நிலையத்தில் வைக்‍க எதிர்ப்பு தெரிவிக்‍கப்பட்டதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலைகள் வைக்‍கப்பட்டுள்ளன.

திண்டுக்‍கல் அடுத்துள்ள குடைப்பாறைப்பட்டியில் அனுமதியின்றி வைக்‍கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீசார் அகற்ற முயன்றபோது, இந்து முன்னணியினருக்‍கும், காவல்துறையினருக்‍கும் இடையே கடும் வாக்‍குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிலையை அங்கிருந்து அகற்றி போலீசார் வேனில் எடுத்துச் சென்றனர். தடையை மீறி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ததாகக்‍கூறி 20க்‍கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதில் மோதல் ஏற்பட்டது. விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றபோது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரக்‍காரர்களை விரட்டினர். இச்சம்பவத்தில் இருசக்‍கர வாகனங்கள் மற்றும் ஏ.டி.எம். மையம் அடித்து நொறுக்‍கப்பட்டது.

கோபிசெட்டிபாளையத்தில், இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்திற்கு இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 212 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00