கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் - கழக உறுப்பினர் சேர்க்கை முகாம்

Sep 14 2018 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி, கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்‍கூட்டம் மற்றும் கழக உறுப்பினர் சேர்க்‍கை முகாம் நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக்‍கூட்டம், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.ஆர்.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்‍க முடிவு செய்யப்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்டக்‍கழகம், மேலப்பாளையம் பகுதிக்‍கழகம் சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம், பஜார்திடல் உள்ளிட்ட பகுதிகளில், வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்‍கை முகாம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு. கல்லூர் வேலாயுதம், மேலப்பாளையம் பகுதிக்‍கழகச் செயலாளர் திரு.ஹைதர் அலி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி கிழக்‍கு மாவட்டக்‍கழக நிர்வாகிகள் கூட்டம், நாகர்கோவிலில் நடைபெற்றது. அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்‍கூட்டங்கள் நடத்துவது குறித்து இதில் ஆலோசிக்‍கப்பட்டது. இக்‍கூட்டத்தில், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து பலர் விலகி, கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்‍கு மாவட்டக்‍கழகச் செயலாளருமான திரு.K.T. பச்சைமால், அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு.லட்சுமணன், கிழக்‍கு மாவட்ட அவைத்தலைவர் திரு.இமாம் பாதுஷா, நகரக்‍கழகச் செயலாளர் அக்‍ஷயா கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேலூர் கிழக்‍கு மாவட்டம், காவேரிப்பாக்‍கம் ஒன்றியக்‍கழகம் சார்பில் சிறுகரும்பூர், வேகாமங்கலம், ஆயர்பாடி உள்ளிட்ட இடங்களில் கழகக்‍கொடி ஏற்றி வைக்‍கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் கிழக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.என்.ஜி.பார்த்திபன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கழகத்தினர் ஊர்வலமாகச் சென்றபோது பொதுமக்‍கள், பெண்கள், ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

கடலூர் கிழக்‍கு மாவட்டக்‍கழகம், பண்ருட்டி நகரக்‍கழகம் சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்‍கை குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக்‍கூட்டம் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்‍கை பணிகளை துரிதப்படுத்தி புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகரக்‍கழகச் செயலாளர் திரு.பூக்‍கடை சக்‍திவேல், பண்ருட்டி சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் திரு.P.S. ஆறுமுகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம், நெய்வேலி நகரக்‍கழகம் சார்பில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஒப்படைக்கப்பட்டன. நெய்வேலி நகரக்‍ கழகச் செயலாளர் திரு.ஜெயக்குமார் கடலூர் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.சி. ஐயப்பன், முன்னாள் மாணவரணி செயலாளர் திரு.மகேஷ், ஒன்றியக்‍கழகச் செயலாளர் திரு.ஜெயபிரகாஷ், மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, பொதுக்குழு உறுப்பினர் திரு.திருமலைவாசன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்‍கு மாவட்டக்‍கழகம் சார்பில், திருவொற்றியூரில் உள்ள மாவட்டக்‍கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணலியை அடுத்த சின்னசேக்‍காடு பகுதியைச் சேர்ந்த இ.பி.எஸ், ஓ.பி.எஸ். அணியினர், தங்களை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டனர். இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் கிழக்‍கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.எஸ்.எம்.சீனிவாசன், மாவட்ட பொருளாளர் திரு.தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00