தேசிய நெடுஞ்சாலைத்துறை நெல்லை கோட்டம் சார்பில் 44 கோடி ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட டெண்டருக்‍கு இடைக்‍காலத் தடை - ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை உத்தரவு

Sep 12 2018 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை கோட்டம் தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் வெளியிட்டப்பட்ட 44 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் மற்றும் மறுடெண்டர் அறிவிப்புகளுக்‍கு, இடைகால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர், நெல்லை தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில் வெளியிடப்பட்ட டெண்டர் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்‍கல் செய்திருந்தார்.

நெல்லை கோட்டம் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 44 கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும், இதில் கலந்து கொண்ட தனக்‍கு டெண்டர் வழங்க முடிவு செய்யப்பட்டது என்றும் மனுவில் கூறியிருந்தார். பணி உத்தரவிற்காக காத்திருந்தபோது, கோட்ட பொறியாளர் திடீரென 10 சதவீதம் கமிஷன் கேட்டதாகவும், அதற்கு உடன்படாததால், டெண்டர் ஒப்புதல் ரத்து செய்யப்பட்டதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். எனவே, மறுடெண்டர் அறிவிப்பு வெளியானதால், டெண்டருக்கு கமிஷன் கேட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தனக்‍கு வழங்கப்பட்ட டெண்டரை மறைத்து, புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதற்கும், தடை விதிக்க மனுவில் கோரியிருந்தார். மேலும் வெளிப்படையாக டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட என்றும், கேட்டுக்‍ கொண்டார்.

இந்த மனு நீதிபதி வீ.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி இரண்டு டெண்டர் உத்தரவுகளுக்கும், இடைக்கால தடை விதித்தனர். மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலை துறையின் நெல்லை கோட்ட கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ARAM PESA VIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2926.00 Rs. 3129.00
மும்பை Rs. 2946.00 Rs. 3120.00
டெல்லி Rs. 2959.00 Rs. 3134.00
கொல்கத்தா Rs. 2959.00 Rs. 3131.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00