தி.மு.க.வின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி குற்றச்சாட்டு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றொரு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலாக அமையும் - தி.மு.க. டெபாசிட் இழந்து 3-வது இடத்துக்கு தள்ளப்படும்

Aug 14 2018 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

தி.மு.க.வின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக, கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றொரு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலாக அமையும் என்றும், இத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்து 3-வது இடத்துக்கு தள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அவரது மகன் மு.க.அழகிரி குடும்பத்துடன் நேற்று அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கமே இருப்பதாகக் கூறினார். கட்சி தொடர்பாக தனது ஆதங்கத்தை தந்தையான மறைந்த கருணாநிதியிடம் தெரிவித்ததாக கூறிய அவர், மற்ற நிகழ்வுகளை பொருத்திருந்து பார்க்கும்படி தெரிவித்தார்.

இந்நிலையில், பிரபல ஆங்கில நாளேட்டிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தி.மு.க.வின் சொத்துக்கள் மற்றும் நிதி ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். கட்சி நிதியின் மூலம் கிடைக்கும் வருமானம் கட்சிக்கு திரும்பக் கிடைக்காமல் யாரோ சிலர் அதை அனுபவிப்பதாக தெரிவித்துள்ள திரு. அழகிரி, மறைமுகமாக ஸ்டாலின் மீது புகார் தெரிவித்துள்ளார். தான் கட்சியில் இருந்தால் இந்த அநீதிகளை எல்லாம் எதிர்த்து குரல்கொடுப்பேன் என்பதால், தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அழகிரி தெரிவித்துள்ளார். கட்சியின் சொத்துக்களை சட்டவிரோதமாக அபகரித்துக் கொள்ளும் முயற்சி நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அத்தேர்தல் மற்றொரு ஆர்.கே. நகர் தேர்தல்போல அமையும் எனவும், தி.மு.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழக்கும் எனவும் திரு. அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்கள், தாம் கட்சியில் மீண்டும் இணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என நினைப்பாக திரு. அழகிரி தெரிவித்தார்.

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகக்கூறி, இன்று நடத்தப்படும் தி.மு.க. தலைமை செயற்குழுக் கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் தவிர பல்வேறு அணிகளில் இருந்து நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள திரு. அழகிரி, இச்செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00