கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஆற்றல்மிகு செயல்பாடுகள் காரணமாக கழகத்தில் இணையும் மாற்றுக்கட்சியினர்

Aug 14 2018 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வரும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனின் ஆற்றல்மிகு செயல்பாடுகள் காரணமாக, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, கழகத்தில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர்.

திருச்சி மாநகரில் பாஜக முன்னாள் மண்டல இளைஞரணி செயலாளர் திரு. சண்முகம் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி, கழகத்தில் இணைந்தனர். இதேபோன்று, திருச்சி மாநகரில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களும் கழகத்தில் இணைந்துக் கொண்டனர். கழகத்தில் இணைந்தவர்களுக்கு, திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஜெ. சீனிவாசன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கழகத்தினர் திரளாக பங்கேற்றனறனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பூந்தமல்லி நகர கழகம் சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்த, கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் குமணன் சாவடியில் நடைபெற்றது. கூட்டத்தில், அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. டி.எ.ஏழுமலை, நகரக் கழகச் செயலாளர் திரு. து.கந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வருகையையொட்டி, அவருக்‍கு சிறப்பான வரவேற்பு அளிப்பது மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்த கூட்டம், கோவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது. புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சேலஞ்சர் துரை மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00