அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் சார்பில், வேலூரில் வரும் 19-ஆம் தேதி, ஏழை, எளிய மக்‍களுக்‍கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் : டிடிவி தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேரூரை

Aug 14 2018 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் சார்பில், வேலூரில் வரும் 19-ம் தேதி, ஏழை, எளிய மக்‍களுக்‍கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சிறப்புரையாற்றுகிறார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் வரலாற்றிலும், கழகத்தின் லட்சியப் பயணத்திலும் வீறுகொண்ட பகுதியாக, நம் கோட்டையாகத் திகழும் வேலூர் மாவட்டத்தில், வேலூர் கிழக்‍கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டக்‍ கழகங்களின் சார்பில், ஏழை, எளிய மக்‍களுக்‍கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்‍கூட்டம் வரும் 19-ம் தேதி ஞாயிற்றுக்‍கிழமை மாலை 4 மணி அளவில் வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள சிம்புகுறள் திரையரங்கம் எதிரே நடைபெறும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. எழுச்சிமிகு இந்நிகழ்ச்சியில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேருரையாற்றுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைக்‍ கழக நிர்வாகிகள், மாவட்டக்‍ கழக நிர்வாகிகள், பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, வார்டு, ஊராட்சி, கிளைக்‍கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உட்பட அனைவரும் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்‍க வேண்டும் என்று தலைமைக்‍ கழகம் கேட்டுக்‍ கொண்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00