ராமநாதபுரத்தில் மணல் கொள்ளை : கிராம மக்கள் வாகனங்களை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்

Aug 14 2018 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் அருகே தனியார் தோப்புகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தை அடுத்த கிராமப் பகுதிகளில் ஆளும் கட்சியினரின் ஒத்துழைப்புடன் அரசு நிர்ணயித்த அளவைவிட மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பழனிவலசை, குலசேகரக்கால், கோகுலவாடி, ஜமீன்தார்வலசை, சித்தார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மற்றும் பனந்தோப்புகளை சிலர் குத்தகைக்கு எடுத்து மணல் அள்ளி வருகின்றனர். இவர்கள் விவசாய நிலங்களில் மணல் அள்ளுவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாகவும், கனிமவளம் கொள்ளையடிக்கப்படுவதாகவும், விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ​பொதுமக்‍கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மணல் கொள்ளையை தடுக்கக்‍கோரி மாவட்ட ஆட்சியரிடமும், அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த 14 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மணல் அள்ளுவதற்காக வந்த 3 டிராக்டர்களை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00