முதுமலை வனப்பகுதியில் ஆக்‍கிரமித்து கட்டப்பட்டுள்ள தனியார் விடுதிகளுக்கு நோட்டீஸ் - சீல் வைக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு

Aug 10 2018 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, உதகை அருகே மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் யானை வழித்தடத்தில் முறையாக அனுமதி இன்றி கட்டபட்ட 27 தனியார் விடுதிகளுக்கு இன்று நோட்டீஸ் வழங்கபட்டநிலையில். நாளை சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி, சோலூர், உல்லத்தி, கடநாடு ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் கட்டபட்டுள்ளதாகவும், அதனால் யானைகள் வனப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் பாதிக்கபட்டுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள யானை வழித்தடத்தில் எத்தனை விடுதிகள் உள்ளன? என்பது குறித்த விரிவான அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதனையடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் மேற்பார்வையில் 3 சிறப்பு குழுக்களை அமைக்கபட்டு அறிக்கை தயார் செய்யபட்டது. பின்னர் அந்த அறிக்கை நேற்று உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கபட்டது. அந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் 27 விடுதிகளை 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்குமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி இன்று 27 தனியார் விடுதிகளுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் நாளை சீல் வைக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00