நாகையில் கள்ளச்சாராய கும்பலுக்கும் கிராம மக்களுக்குமிடையே பயங்கர மோதல் : கள்ளச்சாராய கும்பலைத் தட்டிக்கேட்ட கிராம மக்கள் மீது தாக்குதல்

Aug 10 2018 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை அருகே பாப்பாக்கோயில் பகுதியில், கள்ளச்சாராய கும்பலுக்கும் கிராம மக்களுக்குமிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கள்ளச்சாராய கும்பலைத் தட்டிக்கேட்ட அந்தணப்பேட்டை கிராம மக்கள் மீது அக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

நாகை மாவட்டம், பாப்பாகோவில் கருவைகாட்டு பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுவந்ததால், சிலர் குடித்துவிட்டு அப்பகுதி மக்களிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். போலீசாரும் அவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களை அனுமதித்து வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், ஆத்திரமுற்ற பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்திக்கொள்ளும்படி எச்சரித்தபோது கிராம மக்களுக்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்தோடு, இருசக்கரவாகனமும் எரிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1000 லிட்டர் அளவிலான கள்ளச்சாராய மூட்டைகளை சாலையில் போட்டு உடைத்ததோடு, அக்கும்பலைச் சேர்ந்த செல்வி, பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய 3 பேரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், கள்ளச்சாராயத்தை ஒழிக்கவில்லை என்றால் கிராமத்தைவிட்டு வெளியேற போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3022.00 Rs. 3232.00
மும்பை Rs. 3044.00 Rs. 3223.00
டெல்லி Rs. 3056.00 Rs. 3237.00
கொல்கத்தா Rs. 3057.00 Rs. 3235.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00