தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : மாநிலத்தில் நிரம்பும் முக்கிய அணைகள்

Aug 10 2018 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பி வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகளான பெருஞ்சாணி முழு கொள்ளளவை எட்டி வருகிறது. மாம்பழத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. சிற்றார் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடபட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் பவானிசாகர் அணைக்‍கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 10 ஆயிரத்து 700 கன அடியாக நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, தற்போது 98 அடியை நெருங்கியுள்ளது. இதனால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்குதொடர்ச்சி பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஐந்தருவி மற்றும் பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00