குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 4 காட்டு யானைகள் குட்டியுடன் முகாம் : வாகன ஓட்டிகள் அச்சம்

Aug 10 2018 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், 4 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில், பலாப்பழ சீசன் துவங்கியுள்ளது. இவற்றை உண்பதற்காக, சமவெளிப் பகுதிகளிலிருந்து, காட்டுயானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. கடந்த ஒரு வார காலமாக, குன்னுார் மரப்பாலம் அருகே உள்ள வடுகன் தோட்டம் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டுயானைகள், நேற்று காலை குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில், 4 காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தன.

அப்பகுதியிலுள்ள பலா, சப்போட்டா, மங்குஸ்தான் பழ மரங்களை முறித்து, பழங்களை உண்டு, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க முற்பட்டனர். குட்டியுடன் காட்டுயானைகள் இருப்பதால், ஆக்ரோஷமாக இருக்கும். எனவே, வனத்துறையினர் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் காட்டுயானைகள் ரயில் பாதைக்குச் சென்றன. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3022.00 Rs. 3232.00
மும்பை Rs. 3044.00 Rs. 3223.00
டெல்லி Rs. 3056.00 Rs. 3237.00
கொல்கத்தா Rs. 3057.00 Rs. 3235.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00