தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் அதிகரிப்பு : மக்கள் பீதி

Aug 10 2018 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே பீதி நிலவுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த குன்னமஞ்சேரியில், பீரோவிலிருந்த பணப்பை, பட்டப்பகலில் திடீரென மாயமானது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், வீட்டில் ஆட்கள் இருந்தபோதே 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணியில், சாலையில் நடை பயிற்சி செய்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்றது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அருகிலுள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல் அருகே, பொட்டிரெட்டிப்பட்டியில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 4 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் கல்லாங்காடு பகுதியில், மனைவி கண்முன்னே கணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோட்டில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 3 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில், உழவு இயந்திரம் மானிய விலையில் வாங்க விண்ணப்பம் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வேளாண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை அடுத்த கழனிக்குடி பகுதியில், சாலையில் நடந்துசென்ற மூதாட்டியிடம், முகவரி கேட்பதுபோல நடித்து, 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் தப்பிச் செல்ல முயன்ற 3 பேரை, கிராம மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • AREMPESAVIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00