திருப்பூரில் அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சமையலராக பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் : பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி - பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்

Jul 20 2018 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் அருகே, அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சமையலராக பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் பொதுமக்‍கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பெண்மணி பணியிட மாற்றம் செய்யப்பட்டு அலைகழிக்‍கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவிநாசியை அடுத்து திருமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 75 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இப்பள்ளியின் சமையலராக அதே பகுதியில் உள்ள தலித் பெண்மணி பாப்பாள் என்பவர் பணியிட மாற்றத்தால் கடந்த திங்கட்கிழமையன்று பணிக்கு வந்தார். இதையறிந்த மற்ற சமூகத்தினர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சமையல் செய்தால் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பாப்பாளை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இச்செயலை கண்டிக்கும் விதமாகவும், மீண்டும் பாப்பாளை இதே பள்ளியில் சமையலராக பணி அமர்த்த கோரியும், பணி மாற்றம் வழங்கிட உத்தரவிட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விடுதலை சிறுத்தைகள், தலித் விடுதலை, ஆதி தமிழர் பேரவை மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேவூர் சாலையில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஆட்சியர் பொது மக்கள் மற்றும் தலித் அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பணியிட மாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாப்பாளை அதே பள்ளியில் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே தலித் பெண் பாப்பாள் என்பவர் திடீர் பணியிட மாற்றம் குறித்து எழுந்த பிரச்சனை பற்றி சாபாநாயகர் கருத்து தெரிவிக்காதது கடும் கண்டனத்துக்குரியது என்றும் அரசியல் சூழ்நிலையில் எதிர் கட்சிகளால் பிரச்சனை வரும் போது தான் தலித் சபாநாயகர் என்பதால் தாக்குதல் நடத்தினர் என்று கூறும் சபாநாயகர் அதே தலித் பெண் பாப்பாள் பணியிட மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்காததற்கு ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சேர்ந்த அ.சு.பவுத்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தலித் கூட்டமைப்பு சார்பில் அவினாசி அருகே சேவூரில் வருகிற 23-ந் தேதி இந்த சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00