நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழகத்திலும் லட்சக்கணக்கான லாரிகள் இயங்காததால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jul 20 2018 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான லாரிகள் ​நிறுத்தி கைக்‍கப்பட்டுள்ளன. இதனால் சரக்‍கு போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் 2000 லாரிகள் மற்றும் 600 வேன்கள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கரூரில் ஜவுளி, கொசுவலை உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய் வரை உற்பத்தி பொருட்கள் தேக்கமடைய வாய்ப்புள்ளது. நலிந்து வரும் லாரி தொழிலை மேலும் நசுக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கவரிக் கட்டணம் உயர்வு, இன்சூரன்ஸ் உயர்வு போன்றவற்றில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாகை வேதாரண்யம் பகுதியில் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தினர் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாலைகளில் நூற்றுக்கு மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இதே போல் தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக பலகோடி ரூபாய் மதிப்புள்ள சரக்‍கு பரிமாற்றம் பாதிக்‍கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00