மதுரையில் மணல் கடத்தல்காரர்களிடம் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் : ஜெயா டிவி செய்தி எதிரொலியால் ஆயுதபடைக்கு இடமாற்றம்

Jul 20 2018 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

மணல் கடத்தல்காரர்களிடம் மதுரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் லஞ்ச பேரம் பேசியது குறித்த செய்தி ஜெயா டி.வி.யில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டதன் விளைவாக அவர் ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தவும் மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை வைகை ஆற்றில் நாள்தோறும் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, இந்த கடத்தலை மறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் லஞ்சம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை தெப்பகுளம் அருகேயுள்ள வைகை ஆற்றுபகுதியில் மாட்டுவண்டி மூலமாக மணல் கடத்தலில் ஈடுபடும் ஒரு நபரிடம் லஞ்சம் பெறுவதில் இரு காவலர்களுக்‍கு இடையே நடைபெற்ற வாக்குவாத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில் மதிச்சியம் காவல் சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரன், மணல் அள்ளும் இடத்திற்கு வந்தபோது அங்கு வந்த அண்ணாநகர் காவல்நிலைய காவலர் ஆகிய இருவருக்கும் இடையே பணம் பெறுவதில் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒருவொருகொருவர் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். அப்போது பிரேம் சந்திரன் தன்னிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ இருப்பதாக காவலர் மிரட்டல் விடுத்தார். அந்த வீடியோ குறித்த செய்தியானது ஜெயா தொலைக்காட்சியில் செய்தியாக ஒளிபரப்பானது. இதன் விளைவாக லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்த மதுரை உதவி ஆய்வாளர் பிரேம் சந்திரன், ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00