எடப்பாடி ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு : கொலை, கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

Jul 20 2018 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக, புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பாவனக்கோட்டையில், போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரிடம் விசாரித்தனர். செல்வராஜ், திருச்செல்வம், சங்கர் என்ற அந்த மூன்று பேரும் வழிப்பறிக் கொள்ளையர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த இரண்டு இரு சக்கர வாகனம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மதுரை விமான நிலையத்தில், துபாயிலிருந்து இலங்கை வழியாக வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில், மத்திய வருவாய் புலானாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையின் உரிமையாளர் பாரதி மற்றும் நீலகண்டன், மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00