கழக துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் ஆலோசனையின்பேரில் கழகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்கள் - கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் : மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறுகின்றன

Jul 20 2018 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் ஆலோசனையின்பேரில், கழகத்தை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில், கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்‍கும் முகாம்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒன்றியம் கேத்தி பேருராட்சிக்குட்பட்ட சாந்தூர் பகுதியில், புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டக் கழக செயலாளர் திரு. எஸ். கலைச்செல்வன், கழக சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. தம்பி இஸ்மாயில், ஒன்றியக் கழக செயலாளர் திரு. கோபால்ராஜ் உள்ளிட்டோர், வீடு வீடாகச் சென்று, புதிய உறுப்பினர்களை சேர்த்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வாஞ்சியூர் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்காத எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் நாடழகானந்தல் கிராமத்தில், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக் கழகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட கல்வெட்டினை திறந்து வைத்த தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. எஸ்.ஆர். தருமலிங்கம், கழகக் கொடியையும் ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 500-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம், ஆலந்தூர், எம்.கே.என்.ரோடு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் காஞ்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ம.கரிகாலன் கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் திரு. ஏ.என் லட்சுமிபதி, பொதுக்குழு உறுப்பினர் திரு.டி.ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00