கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்கள் முழுவீச்சு : ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்

Jul 20 2018 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்பேரில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கழக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான உறுப்பினர் சேர்க்கை ஆலந்தூர் பகுதி கழகச் செயலாளர் திரு. ஏ.என். லட்சுமிபதி ஏற்பாட்டில் 156, 157, 158 -ஆவது வட்டம் மதனந்தபுரம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.ம.கரிகாலன், கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக தலைமை அலுவலகத்தில் ராயபுரம் பகுதி 28-வது வட்டக் கழகம் சார்பில், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., தி.முக., பா.ம.க உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி, மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு.சி.சிவசாமி தலைமையில் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழச்சியைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பற்றிய ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது, இதில், மாவட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில், இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணி, திமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி, திருச்சி மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.ஜெ.சீனிவாசன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

நாகப்பட்டினம் வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மயிலாடுதுறையில் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கழக பொருளாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு.எம்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூடத்தில் வடக்கு மாவட்டக் செயலாளர் திரு.எஸ்.செந்தமிழன், ஒன்றியக் கழகம், நகரக் கழகம், பேரூர் கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கையினை விரைவாக நடத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

மதுரை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இருந்து விலகி, மாவட்ட கழக செயலாளர் திரு.ஷ.ராஜலிங்கம் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைந்துக் கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மாதவரம் நகர கழகம் சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்த நிர்வாகிகள் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருவொற்றியூரிலுள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.எம்.சீனிவாசன், தொகுதி உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் திரு.கு.சீனிவாசன், மாதவரம் நகர கழகச் செயலாளர் திரு. எஸ்.ரகு உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள், கழக நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

கடலூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து, கழகப் பொருளாளரும், மண்டலப் பொறுப்பாளருமான திரு.எம்.ரெங்கசாமி ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.கே.எஸ்.கே.பாலமுருகன், சிதம்பரம் நகர கழகச் செயலாளர் திரு.தோப்பு.கே.சுந்தர், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நகர, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00