காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலி மதுபானங்கள், கள்ளச்சந்தை மதுபானங்கள் அரசு பார்களில் அமோக விற்பனை : பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பு

Jul 19 2018 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலி மதுபானங்களும், கள்ளச்சந்தை மதுபானங்களும் அரசு பார்களில் அமோக விற்பனை நடைபெறுவது பொதுமக்‍கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உச்ச​நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகள் மற்றும் நகரப் பகுதிகளில் இருந்த டாஸ்மாக்‍ மதுக்‍கடைகளை தமிழக அரசு மூடினாலும், திரும்பவும் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளை மாற்று இடத்தில் அமைக்‍கும் பணியில் டாஸ்மாக்‍ நிர்வாகம் தீவிரம் காட்டியது. இதற்கு பொதுமக்‍கள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் புதிய கடைகளை திறக்‍க முடியாமல் டாஸ்மாக்‍ நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாமதி பகுதியில் காலை 6 ​மணி முதலே போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றன. மது விற்பனை செய்பவர்கள் காவல்துறையின் முழு அனுமதி பெற்றுதான் விற்பனை செய்வதாக பொதுமக்‍கள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும், இதனால் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாகவும் பொதுமக்‍கள் கூறுகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00