B.Ed படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது : முதல்நாள் தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு

Jul 19 2018 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

B.Ed படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளான இன்று தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 707 B.Ed இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஒற்றைச் சாளர முறையில் நடைபெறுகிறது. ஏற்கனவே நேற்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 35 இடங்களுக்கு 135 அழைக்கப்பட்டு இருந்த நிலையில், 32 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து இன்று, தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கான பாடப்பிரிவு மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழில் 100 இடங்களுக்கு 370 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆங்கில பிரிவு மாணவர்கள் 199 இடங்களுக்கு 494 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. வருகிற 24-ம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வில், மொத்தம் 4 ஆயிரத்து 23 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00