கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்‍கு தூத்துக்‍குடி, நெல்லை மாவட்டங்களில் உற்சாக வரவேற்பு - பா.ம.க உள்ளிட்ட மாற்றுக்‍கட்சி நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

Jul 11 2018 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனுக்‍கு தூத்துக்‍குடி, நெல்லை மாவட்டங்களில் கழகத்தினர் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வீரன் அழகுமுத்துக்‍கோனின் 308-வது பிறந்தநாள் விழாவையொட்டி, தூத்துக்‍குடியில் அவரது திருவுருவச் சிலைக்‍கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தூத்துக்‍குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் இருந்து இன்று புறப்பட்ட கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு வழிநெடுகிலும் கழகத் தொண்டர்கள், பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சுந்தர்ராஜ், கழக அமைப்புச் செயலாளரும், தென்மண்டல செயலாளருமான திரு.மாணிக்‍கராஜா உள்ளிட்டோர், திரு.டிடிவி தினகரனை வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஆத்திக்‍குளம் பகுதிக்‍குச் சென்ற கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அய்யனார்ஊத்து பகுதியில் சாலையின் இருமருங்கிலும் குழுமியிருந்த ஏராளமான மக்‍கள், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை வாழ்த்து முழக்‍கங்களுடன் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து,​ நெல்லை மாவட்டம் சென்ற திரு. டிடிவி தினகரனை, அம்மாவட்ட நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலஇளந்தைகுளத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்‍கப்பட்டது. யானை மாலை அணிவித்து திரு.டிடிவி தினகரனுக்‍கு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. நெல்லை வடக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.பாப்புலர் வி.முத்தையா, வடக்‍கு மாவட்ட அவைத்தலைவர் திரு.பொய்கை மாரியப்பன் உள்ளிட்டோர், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை வரவேற்றனர்.

அங்குள்ள மேரி மாதா சிலைக்‍கு திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தார்.

நெல்லை சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. அங்கு, அவர் கழகக்‍கொடியினை ஏற்றி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, வன்னிக்கோனந்தல் பகுதியில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு, அங்குள்ள முருகன் கோயிலில் இருந்து பூரணகும்ப மரியாதை அளிக்‍கப்பட்டது. தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செல்வகுமார்-ராமலட்சுமி தம்பதியினரின் ஆண் குழந்தைக்‍கு "விஜய்" என்று, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெயர் சூட்டினார்.

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம், மேலநீலதநல்லூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவ, மாணவிகள், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை கைகுலுக்‍கி வரவேற்றனர்.

தொடர்ந்து, குருக்‍கள்பட்டியில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. சாலையின் இருமருங்கிலும் ஏராளமான பெண்கள் திரண்டு வந்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

முன்னதாக, கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனை பா.ம.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திரு.ஹரிசந்திரன், தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்ட பா.ம.க துணைச் செயலாளர் திரு.பரமசிவம், தூத்துக்‍குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றிய பா.ம.க இளைஞரணி செயலாளர் திரு.முத்துகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து கழகத்தில் தங்களை இணைத்துக்‍ கொண்டனர். அப்போது, கழகஅமைப்புச் செயலாளர் திரு.மாணிக்‍கராஜா, தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சுந்தர்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00