தூத்துக்குடியில் வீட்டுமனைப் பட்டா கேட்டு சலவைத் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு

Jul 11 2018 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடியில், வீட்டுமனைப் பட்டா கேட்டு சலவைத் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்‍குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள் தங்களுக்‍கு, வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் எனக்‍ கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களுக்‍கு வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழிலும் குளறுபடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்‍கையும் எடுக்‍காததால், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வி.பெருமாள்பட்டி கிராமத்தில் கடந்த 6 மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மக்‍கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில், தொழிலாளர் விரோதப் போக்‍கை கடைபிடிக்‍கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைக்‍ கண்டித்து, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு, சாலைப் பணியாளர்கள் 300-க்‍கும் மேற்பட்டோர், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00