லோக் ஆயுக்தா எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அது நிறைவேற்றப்பட வேண்டும் - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Jul 11 2018 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, மதுரை வழியே சென்ற, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலூர் புறவழிச் சாலையில், மதுரை புறநகர் வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. செ.சரவணன் தலைமையில் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திரு. டிடிவி தினகரன், லோக் ஆயுக்தா, எந்த நோக்கத்திற்காக அமைக்கப்படுகிறதோ, அதனை முறைப்படி நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மதுரை பாண்டிகோவில் ரிங் சாலையில், மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ம. ஜெயபால் மற்றும் மதுரை மாநகர் தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த தொண்டர்கள், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை எழுச்சிபொங்க வரவேற்றனர்.

இதேபோல், மதுரை வளையங்குளம் பகுதியில், புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. மகேந்திரன் தலைமையில், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருமங்கலம் சுங்கச்சாவடி மற்றும் கள்ளிக்குடி பகுதிகளிலும், திரு. டிடிவி தினகரனுக்‍கு, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், அதன் செயலாளர் திரு. T. இன்பத்தமிழன் தலைமையில், மதுரை சாலையில் திரு. டிடிவி தினகரனுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், அதன் செயலாளர் எதிர்கோட்டை திரு. S.G. சுப்ரமணியன் தலைமையில், சாத்தூரில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருந்திரளான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சாத்தூரில், திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்‍குடி வருகை தந்த கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, கயத்தாறு சுங்கச்சாவடி பகுதியில், கழக அமைப்புச் செயலாளர்கள் திரு. மாணிக்‍கராஜா, திரு. பச்சைமால், தூத்துக்‍குடி வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. செ. சுந்தரராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. ஹென்றி, திருநெல்வேலி புறநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. பாப்புலர் வி. முத்தையா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கூடி எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட முன்னாள் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திரு. நயினார் வீரப்பெருமாள், கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலை கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது கழக அமைப்பு செயலளார்கள், திரு. மாணிக்க ராஜா, திரு. R.P. ஆதித்தன், திரு. பச்சைமால், திரு. கல்லூர் இ வேலாயுதம், திருநெல்வேலி புறநகர் மாவட்டக்‍ கழகச் செயலளார் திரு. பாப்புலர் V முத்தையா, தூத்துக்குடி வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலளார் சுந்தரராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்டக்‍ கழக செயலளார் திரு. ஹென்றி, விருதுநகர் மேற்கு மாவட்டக்‍ கழக செயலளார் திரு. எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன், ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனையடுத்து, விருதுநகர் மாவட்ட ஃபார்வர்டு பிளாக்‍ கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு. வி.கே. கந்தசாமி, திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக்‍கொண்டார்.

இதனையடுத்து, கழக சிறுபான்மைப் பிரிவு தலைவராக நியமிக்‍கப்பட்டுள்ள திரு. லெனின், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00