விழுப்புரத்தில் காரில் கயிறுகட்டி பற்களால் இழுத்து 11-ம் வகுப்பு மாணவர் கின்னஸ் சாதனை
Jul 3 2018 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரத்தில், 11-ஆம் வகுப்பு மாணவர், இரண்டரை டன் எடையுள்ள காரை, கயிறு கட்டி பற்களால் இழுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சுற்றுப்புறத் தூய்மையை வலியுறுத்தியும், இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், விழுப்புரத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் திருமால், கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி, இரண்டரை டன் எடையுள்ள காரின் முன்புறத்தில், கயிறு கட்டி, அதனை தன் பற்களால் கடித்துக்கொண்டு 600 மீட்டர் தூரத்திற்கு இழுத்து கின்னஸ் சாதனை படைத்தார்.
இதனைத்தொடர்ந்து, கின்னஸ் சாதனை படைத்த மாணவர் திருமாலுக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற்றது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக மாணவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.