வரும் 24-தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரும் கழக துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் : உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகும் கழகத்தினர்

Jun 22 2018 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு மாவட்டத்திற்கு கழக அலுவலகத்தை திறப்பதற்காக, வரும் 24-​தேதி வருகை தரவுள்ள கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரனுக்‍கு, எழுச்சிமிகு வரவேற்பு அளிக்‍க கழகத்தினர் தயாராகி வருகின்றனர்.

ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், வரும் 24-ஆம் தேதி, கழகத்தில் இணையும் விழாவும், தொட்டிபாளையத்தில் கழக அலுவலகம் திறப்பு விழாவும் நடைபெறவுள்ளது. இதற்காக கழக அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா திருவுருவப் படங்கள் தீட்டப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆகியோரின் திருவுருவப் படங்களும் வரையப்பட்டுள்ளன.

இந்நிலையில், கழக அலுவலக திறப்பிற்கு வருகை தரவுள்ள கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், கழகக்‍ கொடியையும் ஏற்றி வைக்‍கிறார். இவ்விழாவிற்கு வருகை தரவுள்ள திரு. டிடிவி தினகரனை உற்சாகமாக வரவேற்பதற்கான பணிகளில் கழகத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00