திண்டுக்கல்லில் மலை கிராமத்தில் நடத்தபட்ட திருவிழா : வன விலங்குகள் போல் பல்வேறு வேடமணிந்து ஊர் மக்கள் விநோத வழிபாடு

Jun 22 2018 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் அருகே, மலை கிராமத்தில் நடத்தபட்ட திருவிழாவில், வன விலங்குகள் போல் பல்வேறு வேடமணிந்து, ஊர் மக்கள் விநோத வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான காக்கையன்பட்டி என்ற மலை கிராமத்தில், சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் ஊர் கோவிலான ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீமுத்தாளம்மன் திருக்கோவிலில் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு, சாமி சாட்டுதல் நிகழ்ச்சி ஆரம்பமானது.

வன விலங்குகள் போல் வேடமணிந்தும், மணமக்கள் போலவும், கருப்பணசாமி, காத்தவராயன், அசுரன் என பல்வேறு வேடமணிந்தும் பாரம்பரிய நடனமான தேவராட்டம், கோலாட்டம் ஆடியும் விநோத வழிபாடு செய்தனர்.

இக்கிராமத்திற்கு அடிக்கடி வந்துசெல்ல போக்குவரத்து ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும், பழுதாகி குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரிசெய்து கொடுக்கவேண்டும் என்றும் இப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மது அருந்தக்கூடாது, லுங்கி அணியக்கூடாது, கிராமப்புற எல்லை பகுதிக்குள் செருப்புகள் பயன்படுத்தக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த ஊரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00